தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் வெற்றிலைக்கு பேர்போன இடம் என்றால் கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிலை பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும் ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும் தான். இதனால் வெற்று இலை என்பதை சுருக்கி வெற்றிலை என்று ஆகிவிட்டது.
வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்தில் இருப்பது பெண் என்று இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். பின்புறம் இருக்கும் நரம்புகளை வைத்து பிரிப்பார். ஒரு வருடத்தில் நான்கு வளரும். பின்னர் மூன்று வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.
வெற்றிலையில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது உணவு செரிக்க வெற்றிலையை பயன்படுத்துவார்கள். இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில் வெற்றிலை மிகவும் வீரியமிக்க நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்று ஆய்வு தெரியவந்துள்ளது.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வெற்றிலை கட்டாயம் தேவை. கருப்பு நிறத்தில் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை, கற்பூர வாசனையுடன் சேர்ந்து காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை, மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு இருப்பது சாதாரண வெற்றிலை. வேளாண்மை அறிவியல் படி வெள்ளைக்கொடி, பச்சைகொடி, சிறுகமணி, அந்தியூர் கொடி, என்று வெற்றிலையை வகைப்படுத்துகின்றனர்