Categories
உலக செய்திகள்

தொடர்ந்து சரிவை சந்திக்கும் பிறப்பு விகிதம்…. சீனாவில் வெளியான தகவல்….!!!

சீன நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சரிவை சந்தித்திருப்பதாக புள்ளிவிவரத்தில் தெரியவந்திருக்கிறது.

சீனாவின் புள்ளி விவரங்கள் தெரிவித்திருப்பதாவது, கடந்த வருட கடைசியில் நாட்டின் மக்கள் தொகை 141.26 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தில் அந்த எண்ணிக்கை 141.20 கோடியாக இருந்தது. அதன்படி நாட்டில் இருக்கும் மக்கள் தொகை கடந்த வருடத்தில் 4.8 லட்சம் தான் அதிகரித்திருக்கிறது.

மேலும், கடந்த வருடத்தில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1.06 கோடியாக இருந்தது. அது, கடந்த 2020 வருடத்தில் 1.2 கோடியாக இருந்திருக்கிறது. அந்த வகையில் நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் ஐந்தாவது வருடமாக தொடர்ந்து சரிவை சந்தித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |