உத்திரப்பிரதேசத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனையை மூன்று பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆறு ஆண்டுகளாக வீராங்கனையை பிளாக்மெயில் செய்தது தெரியவந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சேர்ந்த தேசிய அளவிலான சாப்ட்பால் பெண் வீராங்கனை, ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு அவரின் உறவுக்காரரான புஃபா அதனை வாங்கி தருவதாக கூறி அந்த வீராங்கனை இடம் கூறியுள்ளார். இதுக்கு சம்மதம் தெரிவித்த வீராங்கனை ஒருநாள் உறவுக்காரரான புஃபாவை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அப்போது ‘அந்த வீராங்கனையை புகைப்படம் எடுத்து வைத்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் உன்னை கொன்று விடுவோம்’ மேலும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இந்த வீராங்கனை போலீசிடம் புகார் அளிக்க முயலும் போதெல்லாம் இந்த புகைப்படங்களை காட்டி புஃபா மற்றும் அவரது நண்பர்களும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த வீராங்கனை முசாபர் போலீசில் தற்போது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் புஃபா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் திரிவேதி கூறுகையில்: “பாதிக்கப்பட்ட வீராங்கனை கொடுத்த புகாரின் பெயரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பெண்ணிற்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவே அவர்களை எளிதில் பிடிக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளனர்.