Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விசிட் அடிக்கும் பறவைகள்…. பயிற்சி கொடுத்து… கணக்கெடுக்கும் பணி தொடக்கம்…!!

பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிக அளவில் வரும். இதனால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது.

நெல்லை மாவட்டத்தில் முன்னீர் பள்ளத்தில் நேற்று முன்தினம் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கை சங்கம், மாவட்ட அறிவியல் மையம், அகத்திய மலைமக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் உள்ளிட்டோர் இணைந்து இதை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வேய்ந்தான்குளத்தில் நேற்று காலை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி இரண்டு நாட்களில் சுமார் 50 குளங்களில் நடக்க இருக்கிறது என தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளதால் அவர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை, வள்ளியூர், களக்காடு, அம்பை, தென்காசி, ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பறவைகள் குறித்து நன்கு அறிந்த நிபுணர்கள் 3 பேர் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |