சீன நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹாங்காங் மாகாணத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சீனாவில் H5N6 என்ற பறவை காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டு நபர்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 68 வயது நபருக்கும் ஜெஜியாங் மாகாணத்தில் 55 வயது பெண்ணிற்கும் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பறவை காய்ச்சல் ஒரு மனிதன் மூலமாக மற்றொரு மனிதனுக்கு நேரடியாக பரவுவதற்கு மிக குறைவான வாய்ப்புகள் தான் இருக்கிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.