இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குவதற்கு பிரபல பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்குகிறார். இப்படத்திற்கு உத்கர்ஷ் நைதானி என்பவர் கதை எழுதுகிறார். அதன்பிறகு நடிகர் பங்கஜ் திரிபாதி ஹீரோவாக நடிக்க, லெஜண்ட் மற்றும் பானுஷாலி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, ஒரு மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்ட உள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. வாஜ்பாய் ஒரு சிறந்த அரசியல்வாதி மட்டும் கிடையாது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரும் கூட. அப்படிப்பட்ட ஒருவரின் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தை அடுத்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்.