Categories
உலக செய்திகள்

மதுபோதையில் குத்தாட்டம்… பிரதமர் இப்படி செய்யலாமா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

பின்லாந்து நாட்டின் பிரதமர், குடிபோதையில் நண்பர்களோடு பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரீன் 2019 ஆம் வருடத்தில் 34 வயதில் நாட்டின் பிரதமர் ஆனார். உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் இவர் தன் குடியிருப்பில் குடித்துவிட்டு நண்பர்களோடு ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியிக்கிறது.

ஒரு நாட்டினுடைய பிரதமர், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா? என்று கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பிரதமர் சன்னா மரீன், தான் அந்த விருந்தில் மது மட்டுமே அருந்தியதாகவும், பிற போதைப் பொருட்களை பயன்படுத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் தான் நடனமாடியது சட்டப்படியான விஷயம் தான் என்றும் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

எனினும், அந்நாட்டு அரசியல்வாதிகள், பிரதமர் போதைப்பொருள் பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

Categories

Tech |