Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சியா இருக்கனும்னா… மருந்து கண்டுபிடிங்க… எத்தனை ஆண்டுகள் ஆகும்?.. பில்கேட்ஸ் கருத்து என்ன?

கொரோனா  தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் 2 வருடம் வரை ஆகும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகத்தையே அச்சுறுத்த கூடும் என சில ஆண்டுகளுக்கு முன்னரே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடி கொடிய வைரஸ் ஒன்று உலகை தாக்கி இருப்பதால் பில்கேட்ஸ் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும் உன்னிப்பாக அனைவரும் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பில்கேட்ஸ் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்றிருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மருந்துகள் நல்ல பலனை கொடுப்பதாக தெரியவில்லை. பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துகள் உயிரைக் காப்பாற்றுமே தவிர நம்மை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு செல்லுமா என்பது கேள்விக்குறி தான். கொரோனாவை தடுப்பதற்கான சரியான மருந்து கண்டு பிடிக்காத வரை உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக தான் இருப்போம்.

உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கொரோனா தொற்றுக்கான சரியான மருந்தை கண்டறிய வேண்டியது அவசியம். மருந்து கண்டுபிடிப்பதோடு கோடிக்கணக்கில் அந்த மருந்தை உற்பத்தி செய்து உலகில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்படி செய்திட வேண்டும். அது மாதிரியான சிறந்த சக்திவாய்ந்த மருந்தை கண்டறிய ஐந்து வருடங்கள் ஆகலாம். ஆனால் நமது மருத்துவ விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் முயற்சி செய்து வருகின்றனர். எனவே இன்னும் ஒன்பது மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தினை கண்டு பிடித்து விடுவார்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |