கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மற்ற நாடுகளுடன் உள்ள போக்குவரத்தை நிறுத்தி பிரதமர் மோடி அறிவித்தார். விமான போக்குவரத்துக்கு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து மற்றவர்கள் இந்தியாவிற்கும் நுழைய முடியாத நிலை உண்டானது. அதனை தொடர்ந்து மாநிலங்ககுக்கு இடையான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. பாதிப்பு சற்று அதிகரிப்பதாக உணர்ந்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு குறித்து ஏப்ரல் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே கொரோனா தொடர்புகளை தடமறிய பயன்படும் ஆரோக்ய சேது எனும் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தற்போதைய தொழில்நுட்பங்களை இந்தியா சிறப்பாக செயல்படுத்துகிறது என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
கொரோனா தொடர்புகளை தடமறிய பயன்படும் ஆரோக்ய சேது செயலிக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் போதுமான சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியத்துடன் தவிர்க்க இயலாத பொது சுகாதாரத்தை சமப்படுத்தும் உங்களது முயற்சி பாராட்டத்தக்கது எனவும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.