பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. அப்போது காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த கிரேசியா என்ற காவலர் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்த விசாரணையில், “கிரேசியா தன்னுடைய கணவர் அன்புமணியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு இரவில் காவல் நிலையம் வரவழைத்துள்ளார். பின்னர் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டிருந்த, காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை திருடி கொடுத்து அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் காவல் நிலையத்தில் இருந்து ஒரு செல்போனையும், விசாரணை கைதியின் வெள்ளி கொடியையும் அவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கிரேசியா மற்றும் அவருடைய கணவர் அன்புமணி ஆகியோர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.