அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத் நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு தஞ்சை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அரியலூர் கீழப்பலூர் இடையே சாத்தமங்கலம் என்ற இடத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டு இருக்கிறார்கள். அப்போது எதிரே அரியலூரை நோக்கி திருமணத்திற்காக வேன் ஒன்று வந்துள்ளது. அந்த வேன் எதிர்ப்புறம் வந்ததை கண்டு நிலைதடுமாறிய இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் இருவரும் பக்கவாட்டில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பெட்ரோல் டேங்க் பகுதியில் வேன் மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலை வரை இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பயாஸ் உயிரிழக்க தூக்கி வீசப்பட்ட ஜமீன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.