இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தில்லைநகர் 10வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் மீது உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசித்து வரும் அசோகன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து அருகே உள்ளவர்கள் அசோகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.