மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது கௌசிக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி மற்றும் கௌசிக் ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பெரியசாமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அங்கு கௌசிக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.