கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரங்கசமுதிரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது இவர்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் மீது எதிர்பாராவிதமாக மோதி விட்டனர்.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் லோகேஷ் மற்றும் ஸ்ரீதர் போன்றோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தோர் படுகாயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குருபரப்பள்ளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.