கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பாக்கம் கிராமத்தில் சங்கர் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கட்டுமான பணியை முடித்து விட்டு தன்னுடன் சித்தாள் பணிக்காக வந்த மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் இந்திரா என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் மாகரல் காவல் நிலையம் அருகே இவர்களின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது.
அதன் பின் கீழே விழுந்து படுகாயமடைந்த இந்திராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அதோடு சங்கர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.