மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவரின் மீது மோதி விட்டது.
இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் அவரது மகன் சூர்யா என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.