Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPolitics: ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதீஷ்குமார்… பாஜக கூட்டணி ஆட்சி காலி …!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள்,  எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார்.

பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில்,

அதனை உறுதி செய்யும் தகவலாக மேலும் ஒரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக, பீகார் மாநில ஆளுநர் பாகு சௌஹானிடம் ஜேடி(யு)  சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |