Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPolitics: பாஜகவுக்கு டாட்டா போட்ட C.M… புதிய கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார்…!!

பீகாரில் கூட்டணி அரசியல் இருந்து பாஜகவை கழட்டி விட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம்  மற்றும்  காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து புதிய அரசை அமைக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் தீவிரம் காட்டிவிடுவது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி  நடைபெற்று  வருகிறது. இதனுடைய முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் – பாஜகவுக்கு இடையே ஓயாத பணி போர் நடைபெற்று வருவது, பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படையாக அம்பலமானது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வேட்புமனுத்தாக்கள் தொடங்கி,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழா ,  திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில், நித்திஷ் பங்கேற்புகாதது,  பாஜக உடனான அதிருப்தியை வெளிப்படுத்தின.

 

இந்நிலையில் ஒன்றிய அமைச்சராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஆர்.சி.பி. சிங்க்  மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில்,  பதவி விலக நேரிட்டது இந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர் கட்சியில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி, ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல் என்று விமர்சனம் செய்தார்.

இதனை அடுத்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ராஜூ ரஞ்சன்,  கட்சி  எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளின் அவசர கூட்டத்தை இன்று கூட்டினார். இதனிடையே ஒன்றிய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பங்கேற்காது என்று அறிவித்த கையோடு,  காங்கிரஸ் தலைவர் சோனியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நித்தீஷ்,

ராஷ்ட்ரிய ஜனதா தளம்,  காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து பீகாரில் புதிய கூட்டணி அரசை அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். பாஜகவை கழட்டி விட நித்திஷ் முடிவு செய்திருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பாட்னாவில் அரங்கேறி வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில்,

மாநிலத்தின் தனிப்பெருங்கட்சியாக உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் எம்எல்ஏக்களின் கூட்டத்தை இன்று கூட்டுகிறது. இதனால் பீகார் அரசியல் களம் பெரும் திருப்பத்துக்கு தயாராகி வருகிறது.மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அணியை உருவாக்கி, ஆட்சியமைத்தது போல்,

பீகாரிலும் ஆர்.சி.பி. சிங்கை வைத்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த பாஜக திட்டமிட்டதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. நித்திஷ் அரசுக்கு எதிராக சதிக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்பட உள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.

நித்திஷ் கட்சிக்கு 45 எம்எல்ஏக்களும், லாலு கட்சிக்கு 80 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸ் 19 எம்எல்ஏக்கள் என்ற பலத்துடன் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்கள் எண்ணிக்கை தேவை என்பதால்,  பீகாரில் இன்று அரசு மற்றும் அரசியல் மாற்றம் உறுதி என,  உறுதியான  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |