Categories
திருப்பூர் மாநில செய்திகள்

பீகார் இளைஞர்களை தாங்கி பிடித்த முதல்வர்…. உடனடி நடவடிக்கையால் குவியும் பாராட்டு ….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டார் 

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுத்தும் வகையில் மாநில அரசுக்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

மாநிலம் முழுவதும் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல  முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாநில அரசாங்கம் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவளித்து கவனித்துக் கொள்கிறது.

அந்தவகையில் பீகாரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் சிக்கியுள்ளனர். இவர்களால் சொந்த மாநிலம் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதால் அவர்களை அவர்களை கவனித்துக் கொள்ளுமாறு பீகார் மாநில முன்னாள் சுகாதார அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தார். 

அந்த தொழிலாளர்களின் முகவரியையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து உடனே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயனுக்கு இந்த கவனத்தை கொண்டு செல்ல அவர் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்று வடமாநில தொழிலாளர்களுக்கு தேர்வையான உதவியை செய்தார்.

Categories

Tech |