மத்திய முன்னாள் நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லியின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அருண் ஜேட்லி. மகாராஜ் கிஷன் ஜேட்லி, ரத்னா பிரபா ஆகியோருக்கு 1952 டிசம்பர் 28ஆம் தேதி மகனாகப் பிறந்த ஜேட்லி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
இவர் நிதியமைச்சராக இருந்தபோதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியும் இவர் அமைச்சராக இருந்தபோதுதான் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிப்படைந்த ஜேட்லி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி உயரிழந்தார். அவரின் 67ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, ஜேட்லியின் திருவுருவ சிலையை பிகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அம்மாநில துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி பங்கேற்று ஜேட்லியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
पूर्व केन्द्रीय मंत्री स्व0 अरूण जेटली जी की जयंती के मौके पर कंकड़बाग पार्क संख्या-31 में उनकी नव स्थापित प्रतिमा का लोकार्पण करते हुए। https://t.co/B9MHdvnO4h pic.twitter.com/GkKlN9kJYV
— Nitish Kumar (@NitishKumar) December 28, 2019