பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பல மாதங்களாக பல கட்டங்களில் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபட்டதை தொடர்ந்து,
பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்,சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உறுதி அளித்துள்ளார்.
பீகாரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக முதல்வர் நிதிஷ்குமார் கூறுகிறார் என தற்போதைய முதல்வரையும் குற்றஞ்சாட்டியுள்ளார். இவரது பேச்சு பீகார் மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.