Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigNews: நாடு முழுவதும் பதற்றம் – தலைநகர் முழுவதும் பரபரப்பு …!!

டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள கூடிய விவசாயிகள் தங்களுடைய டாக்டர்களுடன் திடீரென டெல்லிக்குள் முயன்றனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்தான் விவசாயிகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விவசாயிகள்  அங்கு இருக்கக்கூடிய பஸ்கள் மற்றும் காவல்துறையின் வாகனங்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் டெல்லியின் பல எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

குறிப்பாக டெல்லி – உத்தரபிரதேசம் எல்லையில் தான் இந்த பதற்றம் அதிகமாக நிலவுகிறது. பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட கூடிய விவசாயிகள் காவல்துறையினரின் பேருந்துகள் மற்றும் அவருடைய வாகனங்களை அடித்து நொறுக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்றாலும் பல இடங்களில் இன்னமும் பதற்றமான சூழ்நிலை என்பது நிலவுகிறது.

Categories

Tech |