பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தெரியவரும். ஆனால் சமூக வலைத்தளங்களில் டைட்டில் வின்னர் ஆரி மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது பாலா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய இறுதி போட்டியாளரான ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . அந்தப் பதிவில் இருந்து ரம்யா பாண்டியன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது . இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .