விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இதனயடுத்து, இந்த வாரம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி, இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, குயின்சி மற்றும் மைனா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் குயின்சி மற்றும் மைனா குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும், இவர்கள் இருவருமே எலிமினேட் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.