Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS Tamil Season 6 அறிவிப்பு….. சற்றுமுன் வெளியான Video…. குஷியில் ரசிகர்கள்….!!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளதாக புதிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆறாவது சீசனுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் அவ்வப்போது வெளியாகி வந்தது.

இதனை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் பல சோசியல் மீடியாக்களில் போட்டியாளர்களின் தகவல் வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், அதற்கான ஒரு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது அந்த வீடியோவில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த முறையும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால் ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

Categories

Tech |