விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தற்போது 6-வது சீஷனுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6:00 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழுவிவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா, நடிகர் கார்த்திக் குமார், நடிகர் அஜ்மல் அமீர், ஆயிஷா, நடிகை கிரண், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி, பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகை தர்ஷா குப்தா, பாடகி ராஜலட்சுமி, விஜே ரக்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.