Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: தனலட்சுமி இருந்துட்டு போகட்டும்… “இவரை முதலில் விரட்டுங்கள்”…. கொந்தளிக்கும் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீட்டிற்குள் சென்ற முதல் நாள் தான் ஆதமா யாரென்று கேட்டு கமலஹாசனை ஜி.பி.முத்து அதிர வைத்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆதம்னா யார் என்று கேட்டு விட்டார். ஜி.பி.முத்து கேட்டதை பார்த்து கமல் நொந்துவிட்டார். அதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இந்த தனலட்சுமி பார்க்கவே கடுப்பாக வருகிறது. முதல் ஆளாக அவரை வெளியேற்றுங்கள் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர்கள் மனதை மாற்றிக் கொண்டுள்ளனர்.

வி.ஜே. மகேஸ்வரியை முதலில் விரட்டுங்கள் பிக் பாஸ் என்று கூறுகிறார்கள். இந்த சீசனின் மீரா மிதுன், காயத்ரி ரகுமான், வனிதா எல்லாம் விஜய் மகேஸ்வரி தான். சும்மா சும்மா எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். ஓவராக வாய் பேசுகிறார், சவுண்ட் விட்டால் தான் ப்ரொமோ வீடியோவில் வருவோம் என்பதை மகேஸ்வரி புரிந்து வைத்திருக்கிறார். வி.ஜே. மகேஸ்வரி செய்வதை எல்லாம் பார்க்க முடியவில்லை பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சீசனில் ஆரி என்று பெயர் வாங்கி இருக்கிறார் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |