பிக் பாஸ் 6ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்துள்ளனர். தற்போதே பிக்பாஸ் ஷோவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. 40 நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மைனா நந்தினி நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பே இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டிய அவர், ஷூட்டிங் காரணமாக கடைசி நேரத்தில், கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஷூட்டிங் நடத்தப்பட்டுவிட்டதாகவும், இன்று கமல் அவரை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைனாவின் வருகையால், பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறலாம்.