Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss Tamil 6: இதை பார்க்கும் போது…. நமக்கே சிரிப்பு வருது…. அமுதவாணனின் குசும்பு இதோ….!!!!

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்தின் வீக்லி டாஸ்காக நீதிமன்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் வழக்குகளை கூறி வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டும். இதில் நீதிபதியையும் ஹவுஸ்மேட்டுகள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில்  காலையில் வெளியான இரண்டு புரோமோகளும் நீதிமன்ற டாஸ்க்கை மையப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ஷிவின்  மற்றும் அசீம் வழக்கு காரசாரமாகவுள்ளது.

இருப்பினும் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. இதில் ராம் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் தனலெட்சுமி நீதிபதியாக உள்ளார். ஏடிகே ராமுவின் வழக்கறிஞராகவுள்ளார். அமுதவாணனின் வழக்கறிஞராக மைனா நந்தினி உள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி கூண்டில் அமுதவாணன் உள்ளார். அப்போது ராம் தான் உடுத்தும் உடைகளை கேலி செய்து அமுதவாணன் பாடல்களை பாடுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அமுதவாணனிடம், ராமுவின் வழக்கறிஞரான ஏடிகே விசாரணை நடத்தினார். அப்போது ராமுவ  பாரு ராமுவ பாரு என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு பாஷா பாடல் மெட்டில் பாடினீர்களா? என விசாரித்துள்ளார். அதற்கு எல்லோரும் பாடிக் கொண்டிருந்தார்கள் இறுதியாக தான் கோரஸ் கொடுத்ததாக அமுதவாணன் கூறுகிறார். இதனை பார்த்தா ஹவுஸ்மேட்ஸ்  அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை  மூடியப்படியும், வாயை மூடியப்படியும், தலையை குனிந்தப்படியும் சிரிக்கின்றனர்.

அதேபோன்று நீதிபதியான தனலெட்சுமியும் சிரிப்பை அடக்க முடியாமல் கைகளை வைத்து மறைத்தப்படி சிரிக்கிறார். பின்னர் சுதாரித்து சிரிப்பை அடக்கிய தனலெட்சுமி சிரிப்பவர்கள் வெளியே போகலாம் என ஸ்ட்ரிக்ட்டாக கூறுகின்றார். இந்த புரோமோவில் ஏடிகேவையும், ஆயிஷாவையும் தவிர அனைத்து ஹவுஸ்மேட்டுகளும் சிரிக்கின்றனர். இந்த புரோமோவை பார்த்த நெட்டிசன்கள் மற்ற டாக்ஸ்க்  போன்று இல்லாமல் நகைச்சுவையாக இருக்கிறது என கூறி வருகின்றனர். மேலும் இதனை பார்க்கும்போது இன்றைய எபிசோடில் சண்டை இல்லாமல், காமெடி  இருக்கும் என்று தெரிகிறது.

Categories

Tech |