பிக்பாஸ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களுக்கு நடன ஆசிரியராக பணிபுரிந்தவர் சாண்டி மாஸ்டர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவு பிரபலமடைந்தார் . தற்போது இவர் ஹாரர் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் சந்துரு இயக்கும் இந்த படத்தில் அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்கிறார் . இந்த படத்தை பாம்பூ ட்ரேஸ் நிறுவனம் சார்பில் ஜீவிதா தயாரிக்கிறார் .
Here You Go! Title & First Look of '3:33' Movie 🌟ring @iamSandy_Off as Lead.#MoonuMuppathiMoonu
Director @NAMBIKAICHANDRU
Produced by @Bamboo_Trees @ProducerJeevi @sathishmanohara @rameemusic @raymondcrasta @Shruthiselvam_ @reshupasupuleti @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/Ffd1Andhxm— Blacksheep Cinemas (@bscinemas) January 3, 2021
சதீஷ் மனோகரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . ‘மூணு முப்பத்தி மூணு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை படக்குழுவினர் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர் . விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.