Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் லாஸ்லியாவின் கருப்பு-வெள்ளை புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டார் ‌. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் . அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளன . சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் மரணமடைந்தார் . திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக லாஸ்லியா தந்தை இறந்ததால் அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர் .

 

இதையடுத்து இலங்கைக்கு சென்று தன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை லாஸ்லியா  செய்து முடித்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தள பக்கத்தில் தனது புதிய புகைப்படத்தை லாஸ்லியா வெளியிட்டுள்ளார் . கருப்பு வெள்ளையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு  ஏராளமான லைக்ஸ்களை குவித்துள்ளது . மேலும் அந்த புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களைத் தருவதாகவும் , துயரங்களில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஒரு உற்சாக பெண்ணாக வலம் வர வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |