விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்டு காடு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கில் வைக்கப்பட்டிருக்கும் 19 பொம்மைகளில் 18 பொம்மைகளை போட்டியாளர்கள் எடுத்து ஒரு அறையில் வைப்பார்கள். இதில் மீதம் இருக்கும் 1 பொம்மையில் யார் பெயர் இருக்கிறதோ அவர் கேமை விட்டு வெளியேற்றப்படுவதுடன், நேரடியாக நாமினேஷனுக்கும் அனுப்பப்படுவார். இந்த டாஸ்க் தொடங்கியதிலிருந்து பல்வேறு விதமான மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் விக்ரமன் அசீமிடம் தனலட்சுமியிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அசீம் முடியாது என்று மறுக்கிறார். இதனையடுத்து அசீமிடம் விக்ரமன் தனலட்சுமி மற்றும் அமுதவாணன் ஆகிய 3 பேரும் சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையின் போது தனலட்சுமி நீங்கதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று அசீமை பார்த்து கூறுகிறார். இதைத்தொடர்ந்து அமுதவாணன் உங்களைப் போன்று என்னால் கத்த முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். மேலும் இந்த ப்ரோமோ வீடியோவானது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.