”பிக்பாஸ் 6” நிகழ்ச்சியின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சமையலறையில் சண்டை வெடித்துள்ளது. ஏன் இப்போது சாம்பார் சமைக்கிறீர்கள்? என மகேஸ்வரியை பார்த்து தனலட்சுமி கேட்கிறார். அதற்கு மகேஸ்வரி ‘லூசு மாதிரி பேசாதீங்க’. இது சமையல் அணியின் விருப்பம்’ என கூறுகிறார். இவர்களுக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Day03 #Promo02 #NowStreaming on #disneyplushotstar @ikamalhaasan #BiggBossTamil #KamalHassan pic.twitter.com/LkNIS0Qgnf
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 12, 2022