ஜி. பி முத்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். வைல்ட் கார்டு என்ரியாக மைனா நந்தினி நுழைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் சோசியல் மீடியா மூலம் பிரபலமான ஜி. பி. முத்து. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் ஜி. பி. முத்து, ரச்சிதா, ஜனனி ஆகியோர் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
https://twitter.com/Orathi_Official/status/1582976217170706433