விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்து என்ன நடக்கும் வீட்டிற்குள் யார் எப்படி சண்டை போடுவார்கள் என்று இரவு 9:00 மணி ஆனதும் டிவி முன்பு அமர்ந்து விடுவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். ஏற்கனவே 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனுக்காண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கான பிரமோவும் சமீபத்தில் வெளியானது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இதற்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகை கிரண் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெமினி, அன்பே சிவம் உள்ளிட்ட திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த கிரண் தற்போது செயலி ஒன்றை உருவாக்கி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.