பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கி நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைய சாந்தி, மற்றும் அசல் கோலார் ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிறகு ஜி.பி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவின் படி இந்த வாரத்தில் ஆயிஷா, அசீம், செரீனா, கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்ஷனில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த ப்ரோமோ வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.