Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலமான அபிராமி திடீர் முடிவு..!!

பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார்.

எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு எடுத்திருக்கிறார். இது பற்றி அவர் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தெரிவிப்பதாவது;

நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன்.  ஏன் என்றால் இங்கு தான் எனக்கு அதிகாரப்பூர்வமான  கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கிருந்தும் விரைவாக வெளியேறிவிடுவேன் என்றும்  டுவிட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |