உலகம் முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிப்பு, உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.