சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நாட்டின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா என்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார சீரழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் புதியதாக குரங்கு பி என்ற வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது. குரங்குகளை தாக்கும் வைரஸ் மனிதனை தாக்கியதால் 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அவரின் மூளை தண்டுவட திரவத்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, குரங்குகளை தாக்கும் BV வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. உறவுகளுடன் நேரடி தொடர்பில் வரும் மனிதர்களை இந்த வைரஸ் தாக்கக்கூடும். இதனால் 60% முதல் 80% வரை மரணம் நிகழ வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.