Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஹெலிகாப்டர் விபத்து… கடைசி திக் திக் நிமிடம்…. பரபரப்பு வீடியோ…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர்.  இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக அமைந்தது.

இந்நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுவதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் பகுதியில் விழுவதை சுற்றுலா பயணிகள் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |