பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்..
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளது கீழமை நீதிமன்றம்.. குடும்ப உறவுகள் சம்பந்தமான வழக்குகள், குற்றவியல் வழக்குகள், திருமண வழக்குகள் உட்பட பல்வேறு வழக்கை விசாரிக்கும் இந்த கீழமை நீதிமன்றத்தில் 3ஆவது தளத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.. இதனையடுத்து அங்கு சென்றபோது அது குண்டு வெடித்த சத்தம் என தெரிய வந்துள்ளது.. இந்த குண்டு வெடிப்பில் இருவர் உடனடியாக உயிரிழந்துள்ளார்கள்..
இதையடுத்து 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.. இதனால் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.. இதற்கிடையே வழக்கறிஞர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே போராட்டத்தை நடத்தி வருகின்றனர்..
ஏனென்றால் வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களுக்கும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.. கிட்டத்தட்ட அங்கு மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது.. எனவே நாட்டு வெடிகுண்டு போன்றவை பயன்படுத்திட்டு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..
இதுகுறித்து உடனே மேல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.. பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய மிக முக்கியமான அரசு கட்டிடத்தில் இப்படியான ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
சிறிய அளவிலான மோதல்கள் எப்போதும் நீதிமன்றத்தில் நடைபெறும்.. ஆனால் குண்டு வெடிப்பு இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே நடந்திருப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகின்றது..
Punjab Police clearing the area after the blast inside Ludhiana court complex which killed two and injured five others. No official word yet on whether a Khalistani terror group is behind the attack or the nature of the blast. pic.twitter.com/esCd26CIN2
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) December 23, 2021