ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளித்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். அந்த அறையில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த காலணிகள், சீருடைகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாயின. அப்போது அந்த கட்டிடத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.