தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு rs.2500 ரூபாயுடன் கூடிய பரிசு தொகுப்பை அறிவித்தது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த பரிசு தொகுப்பு வாங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை 2,500 ரூபாய் தொடங்கிய பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் இன்று மாலைக்குள் வாங்கிக் கொள்ளலாம். இன்று பரிசு தொகுப்பை தவறவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. அதனால் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்.