திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்ணை கிண்டல் செய்த மூன்று வாலிபர்களை அவரது உறவினர்கள் பேருந்தின் உள் நுழைந்து அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் சென்னை ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆம்னி பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய அவரை அதே நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று வாலிபர்கள் நெல்லை முதல் திருநெல்வேலி வரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து நின்ற உறவினர்கள் பேருந்து வந்ததும் உள்ளே ஏறி 3 வாலிபர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வாலிபர்களை தாக்கியது குறித்து கேட்டபோது நடந்ததை கூறி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். பின் தொழிலதிபர் இது எங்கள் குடும்ப பிரச்சினை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். காவல்துறை தலையிட வேண்டாம் என்று கூறி மூன்று பேரையும் காரில் தூக்கிப் போட்டு வேகமாக சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.