அதிமுக பொதுக்குழு உத்தரவுக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு சாதகமாகவும் ஒற்றை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணையை இரட்டை நீதிபதி அமர்வு விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது.
இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கின்றது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெறுவதால் இன்று தமிழக அதிமுக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.