Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு – மத்திய அரசு அறிவிப்பு …!!

வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந் நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கம் நீட்டிப்பு என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் தளர்வுகள் ஏதும் இல்லை.  மே 4ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு . சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமுல்படுத்தப்படும். மே 14ம் தேதி முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Categories

Tech |