Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BIG BREAKING : முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?…. நீலகிரி மலைப்பாதையில்…. ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து…. 7 பேர் பலி..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றபோது காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. இதில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.. மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்..

இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.. விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி பயணித்துள்ளார்கள்.. அவர்களின் நிலை? என்னவென்று இதுவரை தகவல் தெரியவில்லை.. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Ajeet1994/status/1468497238393442307

Categories

Tech |