வரும் டிசம்பர் 13ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றன. ஆனால் தற்போது உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
இந்நிலையில் வரும் டிசம்பர் 15-ம் தேதியுடன் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு முடிவடையும் நிலையில், இது குறித்து டிசம்பர் 13ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவக் குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.