இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் ஆதார் எண் உள்ள நிலையில் தமிழகத்தில் மாநில அரசினால் தனியாக புதிய எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரப்பு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு பத்து முதல் 12 இலக்கங்களில் MAKKAL ID அளிக்கப்பட உள்ளது.