பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார்.இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் கொண்டாடினர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்ற சாக்ஷி அகர்வால் தல அஜித்தின் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/COTUng-grng/?igshid=ao9ymmsb13nz